கோடை விடுமுறை நிறைவடைய உள்ளதால், அகஸ்தியர் அருவியில் குளிக்க, ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.
கேரளா பகுதியில் பருவமழை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை, நெல்லை மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வார இறுதி நாட்கள் மற்றும் கோடைவிடுமுறை நிறைவடைய உள்ளதால், அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையால் அப்பகுதியில் சிறு வியாபாரமும் களைகட்டியுள்ளது.
தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா என வனத்துறையினர் சோதனைக்கு பின்னரே அருவிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.