சட்டவிரோத துப்பாக்கி வாங்கிய வழக்கில் மகனுக்கு பொது மன்னிப்பு அளிக்க மாட்டேன் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் பழக்கத்தை மறைத்து, கடந்த 2018-ம் ஆண்டில் ஹண்டர் பைடன் துப்பாக்கி வழங்கியதாக கூறப்படுகிறது.
துப்பாக்கி வாங்குவதற்கான படிவத்தில் போதைப் பொருள் பழக்கம் கிடையாது என ஹன்டர் பைடன் தவறான தகவல் அளித்ததாக வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக ஊடகத்துக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அதிபர் அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது மகன் ஹன்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு வழங்க மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்தார்.