ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ள நிலையில் அமராவதி சுற்றுவட்டாரப்பகுதியில் நிலங்களில் விலை பன்மடங்கு விலை உயர்ந்துள்ளது.
ஆந்திர அமராவதி தலைநகராக அறிவிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுதுத தேர்தல் முடிவுகள் வெளியான 3 நாட்களில் அமராவதியில் நிலத்தின் விலை 50 முதல் 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டபோது சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி வகித்தார்.
அப்போது புதிய தலைநகராக அமராவதியை கொண்டு வரும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். ஆனால் ஆட்சி மாற்றம் காரணமாக அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.