3-வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்பதாக 7 நாட்டு தலைவர்கள் இந்தியா வருகின்றனர்.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நாளை பதவியேற்கிறார். குடியரசு தலைவர் மாளிகையில் நாளை இரவு 7.15 மணிக்கு நடைபெறும் விழாவில் அவர் 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொள்கிறார்.
இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில். பதவியேற்பு விழாவில் 7 வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்கின்றனர். மாலத்தீவு, வங்கதேசம், இலங்கை, பூட்டான், நேபாளம், மொரீஷியஸ் மற்றும் சீஷெல்சு ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி வந்த வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.