தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமலிநகர் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ், மீனவரான இவர் வழக்கம்போல் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றார்.
அப்போது காற்றின் வேகம் அதிகரித்ததால் ஜார்ஜ் கடலில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதைக்கண்ட சக மீனவர்கள் ஜார்ஜை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு சோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து கடலோர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.