தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அரசு பொது மருத்துவமனை அருகே மினி பேருந்து ஊழியர்கள் திடீரென மோதிக் கொண்டனர்.
கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து, புறப்பட்ட மினி பேருந்து ஒன்று, ஒதுக்கப்பட்ட கால நேரத்தைத் தாண்டி பயணிகளை ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் தாமதமாக புறப்பட்ட மற்றொரு மினி பேருந்தின் ஊழியர்கள், விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒருகட்டத்தில் மினி பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.