அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் விழுந்த மூதாட்டியை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
வானமாதேவியைச் சேர்ந்த மூதாட்டி செல்வி, கொடப்பேரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பொதுமக்களின் உதவியுடன் உயிருக்கு போராடிய மூதாட்டியை பத்திரமாக மீட்டனர்.
இதனையடுத்து மூதாட்டி சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.