புதுக்கோட்டையில் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியைக்கு, நல்லாசிரியர் விருது வழங்கி முன்னாள் மாணவர்கள் கௌரவித்தனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த ரேணுகா தேவி என்பவர் பல்வேறு கல்லூரிகளில் இயற்பியல் துறை பேராசிரியராகவும், மேட்டூரில் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில் அவரை கௌரவிக்கும் விதமாக கடந்த 25 ஆண்டுகளாக கலைஞர் கருணாநிதி கலை அறிவியல் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலர் ஒன்றிணைந்து ரேணுகா தேவிக்கு பாராட்டு விழா நடத்தினர்.
அப்போது சீர்வரிசையாக புத்தகங்களையும், நல்லாசிரியர் விருதும் வழங்கி ரேணுகா தேவியை கௌரவித்தனர்.