டென்மார்க் பிரதமர் மீது திடீரென மர்ம நபர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டென்மார்க் பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன் குல்டோர்வெட் சதுக்கத்தில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் டென்மார்க் பிரதமரை திடீரென தாக்கியுள்ளார்.
இதனையடுத்து தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.