கோவை செல்லும் விரைவு ரயிலில் மத்திய ரிசர்வ் காவலர்கள் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறி சக பயணிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டடது.
சென்னையிலிருந்து கோவை செல்லும் சேரன் விரைவு ரயிலில் 10-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் காவலர்கள் கோவை செல்வதற்காக பொதுப் பயணிகள் பெட்டியில் ஏறியுள்ளார்.
அப்போது மத்திய காவலர்கள் மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதாகவும், பயணிகளை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரயில் ஜோலார்பேட்டைக்கு வந்தவுடன், பயணிகள் கீழே இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ரயில்வே போலீசார் ரகளையில் ஈடுபட்ட ரிசர்வ் காவலர்களை ரயிலில் இருந்து கீழே இறக்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தால் சேரன் விரைவு ரயில் அரை மணி நேரம் தாமதமாக சென்றது.