தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
ஆலங்குளம் அடுத்து உள்ள அத்தியூத்து பிரதான சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன, இந்நிலையில் இந்த சாலை கடந்த 8 மாத காலமாக சீரமைக்காமல் குண்டும் குழியுமாக உள்ளதாகவும், தொடர் விபத்துக்கள் நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும், மழைக்காலங்களில் வாகனங்கள் சேதமடைவதாகவும், இது குறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் வாகனஓட்டிகள் தெரிவித்தனர். எனவே, அரசு அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.