திருச்சி விமான நிலையத்தில் மடிக்கணினியில் வைத்து கடத்தி வரப்பட்ட 24 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளிள் உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்ட 3 பயணிகளின் உடைமைகளை தனித்தனியே சோதனையிட்டனர்.
அப்போது மடிக்கணினியின் அடிப்பாகத்தில் 390 கிராம் தங்கத்தை தகடுகளாக மாற்றி மறைத்து எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, மூவரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.