திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையும் வரும் 11 -ஆம் தேதி பயன்பாட்டிற்கு வருகிறது.
திருச்சியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏராளமான விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையத்தில் புதிதாக ஆயிரத்து 112 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட முனையத்தை கடந்த ஜனவரி 2 -ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ஆனால், ஒரு சில பணிகள் மட்டும் முடிவடையாமல் இருந்ததால், உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியாமல் இருந்தது.
தற்போது அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுள்ள நிலையில், புதிய முனையம் வரும் 11-ம் தேதி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என விமான நிலைய இயக்குநர் சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.