தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தனியார் பேருந்தில் படிக்கட்டின் அருகிலேயே நின்று பயணம் செய்த பெண், பேருந்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த தீபாலட்சுமி என்பவர், தனியார் பேருந்தில் தேனிக்கு பயணம் செய்தார். நடத்துனரிடம் பயணச்சீட்டை பெற்று அதனை பையில் வைக்க முயலும்போது, எதிர்பாராத விதமாக பேருந்தில் இருந்து தீபாலட்சுமி தவறி விழுந்துள்ளார்.
தலையில் படுகாயமடைந்த அவரை சக பயணிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பேருந்தில் இருந்து அப்பெண் தவறி விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.