ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் வடமாநில இளைஞர்களை பீர் பாட்டிலால் தாக்கி இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற சம்பவத்தில் 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை சிப்காட் பகுதியில் பணியை முடிந்து ஒடிசாவைச் சேர்ந்த லோக்நாத் என்பவர், இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, முகவரி கேட்பதுபோல வந்த 3 பேர், பணம் கொடுக்குமாறு மிரட்டல் விடுத்து பீர்பாட்டிலால் தலையில் தாக்கி இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
இதுதொடர்பாக லோக்நாத் அளித்த புகாரின் பேரில் தப்பியோடிய சதீஷ், பார்த்திபன், கார்த்திகேயன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.