நெல்லை மாவட்டம், கடையம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி வனத்துறையின் கூண்டில் சிக்கியது.
கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட கருத்தபிள்ளையூர் கிராமத்தில் இரவு நேரங்களில் உலா வரும் கரடியைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இது தொடர்பாக வனத்துறையிடம் கிராம மக்கள் புகார் அளித்த நிலையில், பழைய தபால் நிலையம் அருகே கரடி மாம்பழம் சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலானது.
இதனை தொடர்ந்து கருத்தபிள்ளையூர் பகுதியில் கரடியை பிடிக்க வனத்துறையினர் சார்பில் கூண்டில் கரடி சிக்கியது. பிடிபட்ட கரடியை அடர்ந்த வனப்பகுதியில் விடுமாறு வனத்துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.