சென்னை – கன்னியாகுமரி விரைவு ரயிலில், முன்பதிவு பெட்டியில் முன்பதிவு செய்யாத பயணிகள் அதிகளவு ஏறியதால், பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.
எழும்பூரில் இருந்து நேற்று மாலை 5.20 மணிக்கு புறப்பட்ட விரைவு ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்தபோது, முன்பதிவு செய்யப்பட்ட S1 பெட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட முன் பதிவு செய்யாத பயணிகள் ஏறினர்.
இதனால் சிரமத்திற்குள்ளான முன்பதிவு செய்த பயணிகள், அரியலூர் அருகே அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் ரயில் காட்டுப்பகுதியில் நின்றது. பின்னர் அரியலூர் ரயில் நிலையத்தில், ரயில்வே போலீஸார் முன்பதிவு இல்லா பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டது