புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி எல்கைப் பந்தயத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாவூர் கிராமத்தில் ஸ்ரீ சோளபிராட்டி அம்பாள் உற்சவத்தை முன்னிட்டு, ஊர் பொதுமக்கள் சார்பில் நடத்தப்பட்ட 18-ம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 21 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
இருவேறு பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தை சாலையின் இருபுறங்களிலும் நின்றிருந்த ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.