புகழ் பெற்ற திருத்தணி முருகன் கோவிலில், நடிகர் பிரேம்ஜி திருமணம் நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திகழ்ந்து வரும், திருத்தணி முருகன் கோயிலில் நடிகர் பிரேம்ஜி திருமணம் நடைபெற்றது.
அப்போது, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், மணமகன் பிரேம்ஜி மணமகள் இந்துவுக்கு, இந்து முறைப்படி தாலி கட்டினார்.
திருமண விழாவில், நடிகர் சிவா, இயக்குநர் சந்தான பாரதி மற்றும் கார்த்திக் ராஜா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர்.
முன்னதாக, நடிகர் பிரேம்ஜி – இந்து தம்பதிகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.