ரயிலில் ஐஆர்சிடிசி விநியோகித்த உணவில், குலோப்ஜாமில் கரப்பான் பூச்சி உயிருடன் கிடந்தது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற விரைவு ரயிலில், பயணி ஒருவருக்கு ஐஆர்சிடிசி சார்பில் உணவு விநியோகம் செய்யப்பட்டது.
அதைத் திறந்து பார்த்த அந்த பயணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் குலோப்ஜாமில் கரப்பான் பூச்சி ஒன்று உயிருடன் கிடந்தது. இதனால் பதறிய அந்தப் பயணி, கரப்பான் பூச்சியை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.