3-ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு பரிசளிப்பதற்காக 3 கிலோ வெள்ளி தாமரையை ஜம்மு- காஷ்மீர் பாஜக பிரமுகர் பிரத்யேகமாக வடிவமைத்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் பாஜக இளைஞர் அணி செய்தித் தொடர்பாளரான ரிங்கு சவுகான், 20 நாட்களில் இந்த வெள்ளி தாமரையை வடிவமைத்ததாக தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ நீக்கிய பின்னர், மாநிலத்தில் அமைதி திரும்பியதாக ரிங்கு சவுகான் கூறியுள்ளார்.