இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் அபார வளர்ச்சி கண்டிருப்பதாக பூடான் பிரதமர் ஷெரிங் டாப்கே தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி வந்த அவர், இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் விமான நிலையங்கள், சாலை, ரயில்வே, கப்பல் போக்குவரத்தில் வரலாறு காணாத உள்கட்டமைப்பு மேம்பாடு ஏற்பட்டிருப்பதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையின்கீழ் வெளியுறவுக் கொள்கை வலுவடைந்ததாகவும் பூடான் பிரதமர் கூறியுள்ளார்.