ஹாட்ரிக் நாயகன் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற விழாவில், வெளிநாட்டுத் தலைவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
2024 மக்களவை தேர்தலைத் தொடர்ந்து நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்பு விழா டெல்லியில் நடைபெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் அண்டை நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அந்த வகையில், பூடான் பிரதமர் தஷோ ஷெரிங் டோப்கே மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
இதேபோல, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த குமார் ஜுகனாத், மற்றும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உள்ளிட்டோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
மேலும், செசல்ஸ் துணை அதிபர் அகமது ஆஃபீஃப் மற்றும் நேபாள பிரதமர் புஷ்ப கமால் தாஹல் பிரச்சந்தா ஆகியோர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.