மக்களவைத் தேர்தல் முடிந்ததை அடுத்து, தொழில் நகரமான திருப்பூருக்கு மீண்டும் வட மாநில தொழிலாளர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை நடைபெற்றது. தேர்தலில் வாக்களிப்பதற்காக வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டது.
கடந்த ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் திருப்பூருக்கு திரும்பி வர தொடங்கினர்.
இந்நிலையில், பாட்னா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் ரயில்கள் மூலம் திருப்பூருக்கு திரும்பினர். ஒரே நேரத்தில் வந்திறங்கியதால், ரயில் நிலையம் முழுவதும் வட மாநில தொழிலாளர்களாக காணப்பட்டனர்.