திருச்சி மாவட்டம், துறையூர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் படுத்துக்கொண்டே ஆபத்தை உணராமல் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மண்ணச்சநல்லூர் – துறையூர் சாலையில் நிவேஷ் என்ற இளைஞர், கடந்த மே 23ஆம் தேதி தமது இரு சக்கர வாகனத்தில் படுத்துக்கொண்டே வாகனத்தை வேகமாக இயக்கினார்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல தரப்பினர் காவல்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் நிவேஷ் கைதுசெய்த போலீசார் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு சிறையிலடைத்தனர்.