இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கொவிலில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்றார். இவரது பதவியேற்பிற்கு பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் அண்ணா பேருந்து நிலையம் மற்றும் நாகர்கோவில் பாஜக அலுவலகம் முன்பு பாஜகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.
இதில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.