அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
ஜெயங்கொண்டம் அருகே அமைந்துள்ள அணைக்கரை பாலத்தில் கனரக வாகனம் மட்டுமே செல்லும் வகையில் இருப்பதால் செக் போஸ்ட் காவலர்கள் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் வாகனங்களை அனுமதித்து வந்தனர்.
இந்நிலையில் பள்ளி திறப்பு மற்றும் முகூர்த்த நாள் உள்ளிட்ட காரணங்களால் இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அவசர தேவைகளுக்காக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.