மணப்பாறையில் இருசக்கர வாகனம் மாயமானது குறித்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வசிக்கும் வெங்கடேசன் என்பவர், தனது வீட்டின் முன்பு இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றுள்ளார்.
சற்று நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனம் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில், வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, முகக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர் வண்டியை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து, கொள்ளையரை போலீசார் தேடி வருகின்றனர்.