Futures and options பிரிவில் வர்த்தகம் செய்யக்கூடிய பங்குகளுக்கான விதிகளை கடுமையாக்க சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி முன்மொழிந்துள்ளது.
அதன்படி, குறைந்த அளவு முதலீட்டாளர்கள் பங்கேற்பு கொண்ட பங்குகளை பட்டியலில் இருந்து அகற்ற செபி முன்மொழிந்துள்ளது.
கொரோனா காலத்திற்குப் பிறகு Futures and options வர்த்தகம் பன்மடங்கு உயர்ந்த நிலையில், சில்லறை முதலீட்டாளர்களின் நலனுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செபி தெரிவித்துள்ளது.