மத்திய நிதியமைச்சராக நியமிக்கப்படப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் உள்ள நிலையில், புதிய நிதியமைச்சருக்கு இருக்கும் சவால்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
காலநிலை மாற்றம் என சர்வதேச அரசியலில் சவாலான சூழலுக்கு இடையே, நாட்டை 3-வது பெரிய பொருளாதாரமாக மாற்றுவது மிகப்பெரிய பணி என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலையான வளர்ச்சி, விலைவாசியை கட்டுக்குள் வைத்தல், வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
வெப்ப அலை மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு இடையே, விநியோகச் சங்கிலியை சீராக வைத்திருக்கவும் முன்னுரிமை அளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தனியார் துறையின் முதலீடுகளில் கவனம் செலுத்தப்படும் என தெரிகிறது.
அதேபோன்று, சுற்றுலா துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.