2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்து இருப்பதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் 3-ஆவது அமைச்சரவையில் இணையமைச்சராக எல். முருகன் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் வளர்ச்சியைக் குறித்து மட்டுமே பிரதமர் மோடி எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
தமிழகத்திலிருந்து தன்னை மீண்டும் மத்திய அமைச்சராக தேர்ந்தெடுத்ததற்காக பிரதமர் மோடிக்கு உளமார நன்றி தெரிவிப்பதாகவும் எல். முருகன் கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு நிதியுதவி அளிப்பதற்கான கோப்புகளில் பிரதமர் மோடி முதலாவது கையொப்பமிட்டதைச் சுட்டிக்காட்டிய எல். முருகன், தேசிய ஜனநாயக கூட்டணி அரசானது, விவசாயிகளுடன் நட்புறவு கொண்ட அரசாகவும், அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை களைவதற்காக தொடர்ந்து செயல்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.