மத்திய அமைச்சரவையில் நீடிக்க விரும்பவில்லை என திரிச்சூர் எம்.பி.யும், நடிகருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவையில் கேரளாவிலிருந்து நடிகர் சுரேஷ் கோபி, ஜார்ஜ் குரியன் ஆகியோருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மத்திய இணையமைச்சராக பதவியேற்ற சுரேஷ் கோபி, டெல்லியில் தொலைக்காட்சி அளித்த பேட்டியில், மத்திய அமைச்சரவையில் இடம்பெற தமக்கு விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஓர் எம்.பி.யாக தொடரவே தான் விரும்புவதாக கூறிய அவர், சீக்கிரமே அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கைவசம் நிறைய படங்கள் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் கட்சி மேலிடம் முடிவு செய்யட்டும் என்றும் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.