பிரதமர் மோடியின் 3-வது ஆட்சியில், சீர்திருத்தங்களும், சாதனைகளும் தொடர வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி வாழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்று சாதனை படைத்துள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளை உரித்தாக்குவதாகத் தெரிவித்துள்ளார்.
மோடி அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களின் பயன்களை இந்தியா அனுபவித்துக் கொண்டிருப்பதாகவும், அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டம் உள்ளிட்ட அனைத்து நதிகள் இணைப்புத் திட்டத்தையும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் திட்டத்திற்கு தடை விதித்தல், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு போடும் முட்டுக்கட்டைகளை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் புதிய அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.