கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட பீன்ஸின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு 150 ரூபாய் குறைந்துள்ளது.
கோடை வெப்பத்தின் தாக்கத்தால் சென்னையில் அரிசி, காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் அதிகரித்து காண்ப்பட்டது. சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த 10 நாட்களாக அதிகரித்து காணப்பட்ட பின்ஸின் விலை தற்போது குறைந்துள்ளது.
வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலை ஒரே நாளில் கிலோவுக்கு 150 ரூபாய் குறைந்துள்ள நிலையில், வரத்து குறைவால் 20 ரூபாய்க்கு உயர்ந்து ஒரு கிலோ வெங்காயம் 38 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று, வரத்து குறைவால் தக்காளியின் விலையும் ஒரே நாளில் 10 ரூபாய் உயர்ந்து 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.