டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தை மைக்ரோசாஃப்ட் சிஇஓ-வும், இந்தியருமான சத்ய நாதெல்லா கண்டுகளித்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியை சத்ய நாதெல்லா, இந்திய அணியின் ஜெர்சி அணிந்து வந்து உற்சாகமாக கண்டு ரசித்தார்.
அப்போது அவருடன் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி தொழில் அதிபரான கவுரவ் ஜெயினும் வந்திருந்தார்.