பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சந்தித்துப் பேசியுள்ளார்.
மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட சிவராஜ் சிங் சவுகான், மரியாதை நிமித்தமாக எல்.கே. அத்வானியை அவரது டெல்லி இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது சிவராஜ் சிங் சவுகான் குடும்பத்தினரும் உடனிருந்தனர். முன்னதாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சிவராஜ் சிங் சவுகான் சந்தித்து வாழ்த்து பெற்றார்.