தென்காசி மாவட்டம், கடையத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது.
கடையத்தில் செயல்பட்டு வரும் வாரச்சந்தையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.
இந்நிலையில் வருகின்ற 17-ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை கொண்டாடப்படுவதையொட்டி, ஆடுகளை வாங்கவும், விற்கவும் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது.
அப்போது 17 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையிலான விலையில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. மொத்தம் சுமார் 50 லட்சம் ரூபாய் அளவில் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.