கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி அருகே, மகளைக் கண்டிப்பதற்காக தந்தையே ஆசிரியருக்கு பிரம்பு வழங்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
புத்தூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சேது கார்த்திக் என்பவர், தனது மகள் குந்தவை நாச்சியாரை, மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் யூகேஜி வகுப்பில் சேர்த்துள்ளார்.
முதல் நாளில் மகளை பள்ளிக்கு அழைத்து வந்த சேது கார்த்திக், தேவைப்படும் நேரத்தில் தனது மகளை கண்டிக்க வேண்டுமென தலைமை ஆசிரியரிடம் அனுமதிக் கடிதத்தை வழங்கியதோடு, பிரம்பு ஒன்றையும் அளித்தார்.