தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் வாழை விளைச்சல் குறைந்ததால் வாழைத்தார்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காரமடை, சிறுமுகை, லிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.
இதனிடையே மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. அதன் எதிரொலியாக வாழை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த விற்பனை சந்தையில் விலை அதிகரித்து காணப்பட்டது.