ஆட்சி அதிகாரத்துக்காக தான் பிறக்கவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமராக தொடர்ந்து 3-ஆவது முறை பதவியேற்றதைத் தொடர்ந்து, முதல்முறையாக தனது அலுவலக பணியாளர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி,
10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் அலுவலகம் என்றால், வலிமைவாய்ந்த அதிகார மையம் என்ற பார்வை இருந்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
தற்போது பிரதமர் அலுவலகத்தை பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றியதாக கூறிய அவர், அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென தான் ஒருபோதும் கருதியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த தேசத்தை உருவாக்கும் குறிக்கோளுடன் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்றும், உலகில் யாரும் எட்டாத உயரத்துக்கு தேசத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் பணியாளர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.