சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
மக்களவை தேர்தலுடன் சிக்கிம் சட்டப் பேரவைக்கும் நடைபெற்ற தேர்தலில், பிரேம் சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி மொத்தமுள்ள 32 தொகுதிகளில், 31ல் அமோக வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து பிரேம் சிங் தமாங் மற்றும் அமைச்சர்களுக்கு சிக்கிம் ஆளுநர் லக்சுமண் ஆச்சார்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
முதல்வர் பிரேம் சிங் உள்பட 12 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். அமைச்சர்கள் பாரம்பரிய உடையணிந்து வந்து பதவி பிரமாணம் செய்துகொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.