கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், செங்கல்பட்டில் பழமையும், பெருமையும் மிக்க ஸ்ரீ கே.சு.ஜெ விவேகானந்தா வித்யாலயா பள்ளி அமைந்துள்ளது.
இந்த பள்ளியில் துவக்க நாளையொட்டி, பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு பேண்ட் வாத்தியம் மற்றும் மங்கள இசை முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஆரத்தி எடுத்ததோடு, மங்கள விளக்குகளின் சுடரொளியில் கடவுளை வழிபடுதல் உள்ளிட்ட நிகழ்சிகள் நடைபெற்றன.
மேலும், பள்ளி வந்த மாணவ, மாணவிகள் தங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் அளித்த சிறப்பு வரவேற்பைக் கண்டு உற்சாகம் அடைந்தனர்.
அப்போது, “சிறந்த முறையில் படித்து, தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவோம்” என மாணாக்கர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.