குடியரசு தலைவர் மாளிகையில் சர்வதேச தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசியுள்ளார்.
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹால், மோரீஷஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜகநாத், பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே, செஷல்ஸ் துணை அதிபர் அகமது அபிஃப் ஆகிய ஏழு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர்களுக்கு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற சர்வதேச தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.