மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு நிதியாக ஒரு லட்சத்து 39 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில், தமிழகத்திற்கு 5 ஆயிரத்து 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு ஜூன் மாதத்திற்கான வரி பகிர்வு நிதியாக ஒரு லட்சத்து 39 ஆயிரம் கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதில், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு 25 ஆயிரத்து 69 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பீகாருக்கு 14 ஆயிரத்து 56 கோடி ரூபாயும் , மத்திய பிரதேசத்திற்கு 10 ஆயிரத்து 970 கோடி ரூபாயும் வரி பகிர்வாக அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலத்திற்கு 10 ஆயிரத்து 513 கோடி ரூபாயும், மகாராஷ்டிர மாநிலத்திற்கு 8 ஆயிரத்து 828 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு 5 ஆயிரத்து 700 கோடி ரூபாயும், ஆந்திர மாநிலத்திற்கு 5 ஆயிரத்து 655 கோடி ரூபாயும் வரி பகிர்வாக அளிக்கப்பட்டுள்ளது.