மத்திய இணையமைச்சராக பதவியேற்ற எல்.முருகனுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்த நிலையில் அவருக்கு எல்.முருகன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மீண்டும் இணை அமைச்சராக பதவியேற்ற எல்.முருகனை நேரில் சந்தித்து அண்ணாமலை வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து தமக்கு வாழ்த்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நெஞ்சார்ந்த நன்றி என எல்.முருகன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.