காங்கிரஸ் வாக்கு வங்கியை அதிகரிக்காமல் கூட்டணி கட்சிகளை குறை கூறுவது தவறு என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு மற்றும் மூத்த நிர்வாகிகள் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது மேடையில் பேசிய செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தி எதிர்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும், காமராஜர் ஆட்சியை பின்பற்ற மாட்டோம் என பிறர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் கூட்டணி கட்சிகள் மதிப்பதில்லை என பிரச்சனை நிலவுவதாகவும், காங்கிரஸ் வாக்கு வங்கியை அதிகரிக்காமல் கூட்டணி கட்சிகளை குறை கூறுவது தவறு எனவும் கூறினார்.