ஒடிசாவில் பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக மோகன் சரண் மஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து புதிய முதல்வராக அவர் பதவியேற்கவுள்ளார்.
147 உறுப்பினர்களைக் கொண்ட ஒடிசா சட்டசபையில் பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளது.இந்நிலையில், ஒடிசா முதல்வரை தேர்வு செய்வதற்கான பாஜக சட்டமன்ற கட்சி கூட்டம் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவராக மோகன் சரண் மஜி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து ஒடிசா முதல்வராக நாளை மாலை பதவியேற்கிறார். மாலை 5 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், கனக் வர்தன் சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தெரிவித்தார்.