விமான விபத்தில் மலாவி துணை அதிபர் சௌலோஸ் சிலிமா உயிரிழந்ததாக அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
மலாவி துணை அதிபர் சௌலோஸ் சிலிமா உள்ளிட்ட 10 பேர் பயணித்த ராணுவ விமானம் அந்த நாட்டின் மூஸு பகுதியில் பறந்தபோது திடீரென மாயமானது. விமானத்தைத் தேடும் பணியில் அந்த நாட்டு பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. அவர்கள் பயணித்த விமானத்தின் பாகங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். இந்நிலையில், விமானத்தில் பயணித்த துணை அதிபர் சௌலோஸ் சிலிமா உள்ளிட்ட 10 பேரும் உயிரிழந்துவிட்டதாக மலாவி அதிபர் லாசரஸ் சக்வேரா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.