கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்த கணவரை அடித்துக்கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.
கலுகோபசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த பாப்பிரெட்டி என்பவர் மதுபோதையில் அடிக்கடி அவரது மனைவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி மஞ்சுளா பாப்பிரெட்டியை கட்டையால் அடித்து கொலை செய்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த தேன்கணிக்கோட்டை போலீசார் மஞ்சுளாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.