கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வழக்கறிஞர் மீது பொய் வழக்குப்பதிவு செய்ததாக பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூரை சேர்ந்த வழக்கறிஞர் கனல் கதிரவன் என்பவருக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் சிலர் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், இடத்தின் உரிமையாளர் எனும் ஒரே காரணத்துக்காக முதல் தகவல் அறிக்கையில் வழக்கறிஞர் கனல் கதிரவனின் பெயரையும் சேர்த்து பதிவு செய்துள்ளனர்.
இதனைக் கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.